My Blog List

Blogroll

Followers

Text

Tuesday, 20 July 2010

“சாட்டி” தொல்லியல் அகழ்;வாய்வும், அதன் விஞ்ஞானத் தன்மையற்ற நிலையும்

1. “சாட்டி” என்றால் என்ன?

“சாட்டி” என்பதும், சாடி என்பவைகளும், மொழியியல் hPதியில் ஒன்றையே குறிப்பவைகள். சட்டி என்பதற்கும், சாட்டி என்பதற்கும், மொழியியல் hPதியில் அதிக வேறுபாடு இல்லை. ஆனால், மரபு hPதியில்தான் வேறுபாடுகள் உள்ளன. இவை: “ச் + அ + ட் + இ” அல்லது “ச் + ஆ + ட் + இ” தன்மையைக் குறிக்கும்.
அதாவது: சித்தாவத்தை உதயகுமார் மொழிக்கோட்பாடு (1998) இனைப் பிரயோகித்தால், அவை: மேன்மை கொண்டிருக்கும் டிழவா phலளiஉயட யனெ ழெn phலளiஉயட யஉவiஎயவழைn நிறைவு தன்மையைக் குறிக்கும்; அல்லது: மேன்மை மிகுதியாகக் கொண்டிருக்கும் டிழவா phலளiஉயட யனெ ழெn phலளiஉயட யஉவiஎயவழைn நிறைவு தன்மை யைக் குறிக்கும். இவையிரண்டும்:
சீலை; ய தயச; குடுமி;

வடிவிலான மணற்கும்பம் அல்லது ஒரு பொருள்; அல்லது
வடிவிலான ஒரு பொருள்;; வெண்மை; பொன்மை; மற்றும் பலவற்றைக் குறிக்கமுடியும்.

இந்தநிலையில், “சாட்டி” என்ற இடத்தில், படத்தில் காட்டியவாறான மணற் கும்பங்கள் காணப்படலாம்; வெண் மணல் காணப்படலாம்; கடலின் அடிப்பகுதி வெண்மையாகக் காணப்படலாம். இவற்றிற்கு மேலாக, “சாட்டி ஊர்” என்பது, வெண்ணெய் என்பதையும் குறிக்கமுடியும்.

வெண்ணெய் என்பது புத்தபெருமானுடனும், பெருந்தேவனுடனும் தொடர்பானது. ஆகவே, சாட்டி ஊர் ஆனது, பௌத்தத்துடன் தொடர்பான ஒரு ஊராக இருந்திருக்கமுடியும்.

தீவகத்தின் வேலனைப் பகுதியில் “சாட்டி” என்றவொரு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பண்டைக்காலத்தில் பௌத்த கோயில் இருந்திருக்க முடியும். ஆனால், இதற்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பது முக்கிய கேள்வியாகும்.

மறுபுறத்தில், இந்த இடப்பகுதியில் இன்றுவரை ஒரு இசுலாமிய பள்ளிவாசலும், இரண்டு சேர்ச்சுகளும் உள்ளன. இந்தச் சேர்ச்சுகளில் ஒன்றானது பிரான்சு தேசத்தில் பாp (Pயசளை) மாநகாpலிருந்து தென் மேற்கே 120 கிலோ மீற்றர் தொலைவில் பாp இற்கும், டுந ஆயளெ இற்குமிடையில் ஊhயசவசநள என்ற இடத்தில் அமைந்துள்ள பெரும் சேர்ச்சின் அடிப்படையில் இங்கிருந்த பிரெஞ்சுக் கத்தோலிக்க சுவாமிகளால் உருவாக்கப்பட்டிருக்க முடியும் எனச் சிலர் கருதுகின்றனர். இந்த ஊhயசவசநள ஆனது, காலப்போக்கில் சாட்டி ஆகியிருக்கமுடியும் எனவும் அவர்கள்; கருதுகின்றனர். பிரான்சின் பிரசித்தி பெற்ற லூர்து (டுழரசனநள) மாதா கோவில்களும் யாழ் குடா, மற்றும் பகுதிகளில் காணப்படுவது அவதானிக்கத்தக்கது.

எதுவிதத்திலும், ஆதியில் பௌத்த கோயிலும், பின்னர் அங்கு இசுலாமிய பள்ளி வாசலும், போர்த்துக்கேயர் வருகையின் பின்னர் அங்கு கத்தோலிக்கச் சேர்ச்சும் உருவாக்கப்பட்டிருக்கமுடியும்.

ஆனால்;, இவ்விடத்தில் உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை அறிய, இப்பகுதியில் விhpவாக மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆய்வுகள்தான் எமக்குப் பொpதும்; உதவ முடியும்.

2. “சாட்;டி”யில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் அகழ்வாihய்வு:



அண்மைக்காலத்தில், யாழ்ப்பாணப்; பல்கலைக் கழகத்து வரலாற்றுத்துறையைச் சேர்ந்த கலாநிதி ப. புஷ்பரட்ணம்; அவர்களின் வழிகாட்டலில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் 1ஆம், 2ஆம் வருடங்களில் கல்வி கற்;கும் தொல்லியல் கற்கை நெறி மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வு ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டவைகள் தொடர்பாகக் கலாநிதி ப. புஷ்பரட்;ணம், பேராசிhpயர் சத்தியசீலன் ஆகியோர்களால் தமிழ்த் தினசாpகளில் எழுதப்பட்டுவரும் கட்டுரைகள்;, ஒருபுறத்தில், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்புக்களையும்; ஏற்படுத்திவரும் அதேவேளையில், மறுபுறத்தில், அறிவியல், தொல்பொருள் ஆய்வு என்பவை தொடர்பாக ஒருவித அச்சத்தையும் உருவாக்;கி வருகிறது. குறிப்;பாகக் கூறினால், முன்னர் சிங்கள தேசத்துப் பல்கலைக் கழகத்தினரும், ஏனைய தொல்பொருள் ஆராய்வாளர்களும் “தொல்பொருள் ஆய்வு” என்பதை எப்படிச் சிங்கள மக்களை ஒரு மாயையுள் தள்ளப் பயன்படுத்தி வந்துள்ளனரோ, எப்படி அந்த மாயையானது தொல்பொருள் ஆய்விலும், வரலாற்று ஆராய்விலும்;; எந்தவித விஞ்ஞான hPதியிலான ஆய்வு முன்னேற்றமும் அடையாதவாறு ஒருவித கட்டுப்படுத்தலை உருவாக்கக் காரணமாக இருந்தனவோ, அதே போன்ற நிலையானது இன்று எமது தமிழ்த் தேசத்தில் உருவாகிறதா; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினரால் அது இன்று உருவாக்கப்படுகிறதா என்ற அச்சமே அது.

தென்;னிலங்கையின் தொல்பொருள், இலக்கிய ஆராய்;வாளர்களால் மூழ்கடிக்கப்பட்ட மாயையுள்; இருந்து தம்மை மீட்டுக் கொள்ள முடியாத நிலையானது சிங்கள மக்களுக்குத் தொடர்வதே, இன்றுவரை இலங்கையின் பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாது இருப்பதற்கான முலக் கராணமாகும். இந்தியாவானது இன்று அரசியல், கலாசார, சமூக முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியாது இருந்து வருவதற்கும், இதுபோன்றதே முக்கிய காரணமாகும்.

தமிழ் இலக்கிய, தமிழ் மொழி ஆராய்வாளர்களது போலி ஆய்வுகளினால், தமிழ் பேசும் மக்களும்,; சிங்கள, இந்திய மக்களைப்போல்;, ஏற்கனவே, ஒருவித மாயையுள் வீழ்த்தப்பட்டுள்ளனர் என்ற உண்மையை எவரும் எடுத்த எடுப்பில் நிராகாpத்துவிட முடியாது. இந்தநிலையில், தமிழர்கள்; செறிந்து வாழும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்பொருள் ஆய்வுகளும்;, ஏனையவைகள்போல் விஞ்ஞானத் தன்மையற்றவையாக வைக்கப்படுவது, அவர்களை அந்த மாயையுள் தொடர்ந்து வீழ்;த்;தும் ஒரு நடவடிக்கையாகவே இருக்கும்; தமிழ் மக்களைத் தொல்பொருள் ஆய்;வு என்பதூடாகவும்; தமது அறிவையும், ஆராயும் தன்ரமயையும் வளர்ப்பதில் பெரும் தடைவிதிப்பாகவே இருக்கும்.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினருக்கு தமிழ் பேசும் மக்களை மாயையினுள் வீழ்;த்தும் இந்த உhpமை இருக்குமானால், அவர்களது தவறினைச் சுட்டிக் காட்டி, திருத்தங்களை ஏற்படுத்தும் உhpமையானது, எமது தமிழ்த்தேசத்தின் ஒவ்வொரு மகனுக்கும், மகளுக்கும் உண்டு என்பதையும் எவரும் நிராகாpக்க முடியாது.

இந்தநிலையில், “சாட்டி” யில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சி பற்றியும், அங்கு கண்டெடுக்கப்பட்டவை தொடர்பாகப்; பேராசிhpயர் வி. சிவசாமி, பேராசிhpயர் சத்தியசீலன், கலாநிதி புஷ்பரட்ணம் என்பவர்களால் தொpவிக்கப்பட்ட கருத்துக்கள் பற்றியும்;, அங்கு கண்டெடுக்கப்பட்டவை பற்றியும் இங்கு விஞ்ஞான hPதியாக ஆராயப்படுகிறது.

3. தினசாpகளில் பேராசிhpயர்களாலும், கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களாலும்
கொடுக்கப்பட்டுள்ள விபரங்களும், தொpவிக்கப்பட்ட கருத்துக்களும்

சாட்டியில் மேற்கொள்ளப்பட்ட ஆகழ்வுகளுள், இதுவரையில் இரண்டு விடயங்கள் பற்றிய விhpவான விபரங்களே தினசாpகளில் வெளியிடப்பட்டுள்ளன. அவையாவன:
1. “ஈமைச் சின்னக் கட்டடம்;;”
2. சுடுமண் கிணறு;

இவற்றுள் முதலாவது பற்றிய விபரங்களையும், கருத்துக்களையும், கலாநிதி

ப. புஷ்பரட்ணம் அவர்களால் எழுதப்பட்டு, நமது ஈழநாடு என்ற தினசாpயின் 01.10.2004 வெளியீட்டின் பக்கம் - 39இல் “ சாட்டி’யில் எழுத்துப் பொறிப்புகளுடன்…. 2000ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு!” என்ற கட்டுரையில் காணமுடியும்.

இரண்டாவது பற்றிய விபாpப்புக்களையும், கருத்துக்களையும், பேராசிhpயர் சத்தியசீலன் அவர்கள் கலாநிதி புஷ்பரட்ணத்தின் வாயு+டாக யாழ் தினக்குரல் தினசாpயின் 07.10.2004 வெளியீட்டின் பக்கம் 5 இல் எழுதி வெளிடப்பட்டிருந்த “சாட்டியின் நாகாpகச் சிறப்பை வெளிப்படுத்தும் தொன்மைச் சான்றுகள் தொடர்ந்து கண்டுபிடிப்பு” என்ற கட்டுரையிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

இந்த இரண்டு கட்டுரைகளதும் பிரதிகளும் கீழே தரப்பட்டுள்ளன.


1. “ஈமச்சின்னக் கட்;டடம்;”

கலாநிதி ப. புஷ்பரட்ணம் அவர்கள் “ஈமச் சின்னக் கட்டடம்” என விபாpக்கப்பட்டதின் அமைப்பு முறையினை ஒருவர் அவரது கட்டுரையிலுள்ள விபாpப்பு+டாகவும்; அவர் தனது கட்டுரையுடன் தந்துள்ள படமூடாகவும் அறிந்;துகொள்ள முடியும்.

எதுவிதத்திலும், அகழ்வின்;போதான வெவ்வேறு கட்டங்களையும், வெவ்வேறு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களினது படங்களையும், நண்பர் கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள் எமது இணையத்தளத்திற்கு ஆய்வுக்குத் தந்திருந்தார். அதற்கு அவருக்கு நன்றி தொpவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

அகழ்வினை ஆரம்பிக்குமுன்னர் அந்த இடத்தின் வெளித்தோற்றம், அங்கு கண்டெடுக்கப்பட்டவைகளின் கலர் படங்களை ஆங்காங்கு வாசகர்கள் கீழே காணலாம்.

நண்பர் கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள்;, இப்படங்களைத் தந்ததின்; முதல் நோக்கமானது, தம்மால் தொpவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாகத் தமிழ் பேசும் மக்களுக்கு விஞ்ஞான hPதியிலான விமர்சனத்தைச் செய்வதனூடாக, புதிதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொல்லியல் கற்கை நெறியு+டாக விஞ்ஞான hPதியிலான தொல்பொருள் ஆய்வுகளைச் செய்ய உதவக்கூடிய கருத்துக்களைப் பெறுவதாகும்.

இந்தநிலையில், இங்கு, விருப்பு, வெறுப்பு, ஆசைகள், அபிலாசைகள் என்பவைக்கிடமில்லாத விதத்தில்;, ஆய்வுகளும், விமர்சனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகளும், விமர்சனங்களும் எவருக்கும் கோபத்தினையும், துன்பத்தினையும் ஏற்படுத்;துமேயானால், அவர்கள் விஞ்ஞான hPதியான ஆய்வுகளையும், அவையு+டாக வரப்படும் முடிவுகளையும் ஏற்குமளவுக்குத் மனத் iதாpயமற்ற பேடிகள், மனப் பக்குவமடையாதவர்கள் என்பதுதான் உண்மை. ஆகவே, அவர்களும், மனத்iதாpயத்தையும், மனப்பக்குவத்தையும் தமக்கு வளர்த்துக்கொள்ளவேண்டும். இது மிகவும் கடினமானதே. ஆனால், எமது அறிவையும், ஆராயும் தன்மையையும் வளர்த்துக்கொள்ள, இது மிக மிக அத்தியாவசியமானது.

இந்தநிலையில், கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களும், குறிப்பாக அவரது வழிகாட்டலில் சாட்டியில் தொல்பொருள் அகழ்வாராய்வில் ஈடுபட்டுவரும் பல்கலைக் கழக மாணவர்களும், பௌதீக hPதியிலும், அறிவியல் hPதியிலும் கடினமான ஒரு துறையான தொல்லியல் ஆய்வுகள் தொடர்பாகச் செய்யப்படும் விமர்சனங்களை துணிவுடன் எதிர்கொள்ளவேண்டும், மனமார வரவேற்கவேண்டும். அவற்றை ஆராய்ந்து, வாதித்து, திருத்தங்களை ஏற்படுத்தி, எதிர்கால அகழ்வாராய்ச்சிகளை புதிய உற்சாகத்துடன் மேற்கொள்ளவேண்டும்.

இந்த “ஈமச்சின்னக் கட்டடத்;தில்” கண்டெடுத்தவைகள் எனப் புஷ்பரட்ணம் அவர்கள் பின்வருவனவற்றைத் தனது கட்டுரையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்:

1. மீன்;, தூண்டில்; அடையாளங்கள் இடப்பட்டும், இவைகள் இரண்டிற்கும் கீழே ‘ராசா’ என வாசிக்கக்கூடிய இரு பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு;

2. ஒன்பது பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மனித எலும்பு;

3. பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்கு.

இப்பொழுது, இவை ஒவ்வொன்று பற்றியும், தனது கட்டுரையில் புஷ்பரட்ணம் அவர்கள் என்னென்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.

3.1 பிராமி எழுத்துக்களில் “ராசா” எனப் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு:

இந்த மட்பாண்ட ஓட்டின் படத்தினைப் புஷ்பரட்ணம் அவர்கள் தனது கட்டுரையுடன் தந்துள்ளார். அந்த ஓட்டினை விபாpக்கையில் அவர்: “பெருங் கற்காலப் பண்பாட்டு மக்களுக்கே சிறப்பாக உள்ள கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்ட ஓடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து, அந்த மட்பாண்ட ஓட்டினைப் பெருங்கற்காலத்துடன் ஏற்கனவே அவர் இணைத்துவிட்டார் என்பது தெளிவாகிறது.

மேலும் அவர் அந்த ஓட்டில் இரு அடையாளங்கள் (ளலஅடிழடள) இடப்;பட்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார். அந்த அடையாளங்களை அவர் குறிப்பாக எவை என்பதையும் நிர்ணயித்துள்ளார்.

மேலும், இந்த இரண்டு அடையாளங்களுக்குக் கீழே, “ராசா” என வாசிக்கக்கூடிய இரு பிராமி (டீசயாஅi) எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இந்த மட்பாண்ட ஓட்டின் படத்தினைக் கட்டுரையுடன் தந்துள்ள நிலையில், கீழே தரப்பட்டுள்ள நிலையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டில், இரு ளலஅடிழடள களின் கீழ்தான் ராசா என வாசிக்கக்கூடிய இரு பிராமி எழுத்துக்கள் இருக்கவேண்டும் என்று கொள்ளவேண்டியுள்ளது.

இந்தநிலையில், இந்த ஓட்டில்; பின்வருவனவற்றை ஆராயவேண்டியுள்ளது:

1. குறிப்பிட்ட அந்த ஓடு மட்பாண்ட ஓடுதானா? அல்லது வேறு பொருளா? அது மட்பாண்ட ஓடு ஆயின், அது கறுப்புச் சிவப்பு மட்பாண்ட ஓடுதானா?

2. அந்த ஓட்டில் காணப்படும் இரண்டும் அடையாளங்களா (ளலஅடிழடள)? அல்லது அவை வேறு கீறல்களா? வெடிப்புக்களா? அவை இடப்பட்ட அடையாளங்களாயின், அவை மீனையும், தூண்டிலையும் அடையாளப்படுத்துகின்றனவா?

3. இந்த இரண்டு அடையாளங்களுக்குக் கீழேயுள்ள பகுதியில் பிராமி எழுத்துக்கள் உள்ளனவா? இரண்டு பிராமி எழுத்துக்கள் மாத்திரம்தான் அதில் உள்ளனவா? அதில் வேறு மொழி எழுத்துக்கள் இல்லையா? அப்படி இருந்தால் அவை எவை? அவை ‘ராசா’ என வாசிக்கக்கூடியவையா?


3.2 பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட “மனித எலும்;பு:”

இந்த “எலும்பு” தொடர்பாக, புஷ்பரட்ணம் அவர்கள் பின்வருவனவற்றைத் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்:

“அத்துடன் அடக்கம் செய்யப்பட்ட எலும்புகளில் ஒன்று மனித வடிவில் வெட்டப்பட்டு அதன் ஒரு பக்கம் தட்டை வடிவமைக்கப்பட்டு அதன்மேல் ஒன்பது பிராமி எழுத்துக்கள்; பொறிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இங்கு கிடைத்த இன்னொரு அhpய சான்று எனக் குறிப்பிடலாம். இதில் பொறிக்கப்பட்டுள்ள அனைத்து எழுத்துக்களும் தற்போது சாpவர வாசிக்கக் கூடிய நிலையில் காணப்படாவிட்டாலும், இரண்டாவது வாpயில் உள்ள மூன்று எழுத்துக்களையும் ‘பாகன்;’ என வாசிக்கக்கூடியதாக இருக்கிறது. இதன் பின்னொட்டு சொல் தமிழில் ஆண் மகனைக் குறிக்கும் ‘அன்;’ என்ற விகுதியுடன் முடிவதால், இது ஒரு தமிழ்ப்பெயர் என்பது உறுதியாகிறது. இந்த எழுத்துப் பொறித்த சாசனத்தைப் பார்வையிட்ட பேராசிhpயர் சிவசாமி இவை இறந்தவாpன் பெயரையும், தொழிலையும் குறிப்பதாக இருக்கலாம் எனக் கருத்துத் தொpவித்துள்ளார். ஆகவே, ஈமச் சின்னத்துள் கிடைத்த பலதரப்பட்ட சான்றுகளுடன் எழுத்துப் பொறித்த எலும்பு, சங்கு, மட்பாண்டங்கள் போன்றவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இங்கு அடக்கம் செய்யப்பட்ட மனித எலும்புகள் இற்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் சாட்டியில் வாழ்ந்த பு+ர்வீகக் குடிமகனுக்குhpயதென்பது உறுதியாகத் தொpகிறது.”

கலாநிதி புஷ்ரட்ணம் அவர்கள் குறிப்பிட்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மனித எலும்பின் படம் கீழே தரப்பட்டுள்ளது.


இங்கும், கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள், சில திட்டவட்டமான முடிவுகளுக்கு வந்துள்ளார். ஆனால், இங்கு பல கேள்விகள் எழுகின்றன. அவையாவன:

1. புஷ்பரட்;ணம் அவர்கள் குறிப்பிடும் பொருள் உண்மையில் எலும்புதானா? இதற்கு என்ன ஆதாரம்? அது எலும்பாயின், அது மனித எலும்பு என்பதை எப்படி அவர் உறுதிப்படுத்தியிருந்தார்?

2. இந்தப் பொருளின் எப்பகுதியில் எழுத்துக்கள் காணப்படுகின்றன? அவர் எப்படி அவை பிராமி எழுத்துக்கள் என்பதை உறுதிப்படுத்தினார்?

3. அதில் ஒன்பது பிராமி எழுத்துக்கள் இருப்பதாக எண்ணியுள்ள புஷ்பரட்ணம் அவர்கள்;, பாகன் என்பதை வாசித்துள்ளவைகள் தவிர்ந்த ஏனைய எழுத்துக்கள் எவை என்;பதை ஏன் அறியமுடியாது போனது?

4. இறந்தவாpன் எலும்பில் பெயரையும், அவரது தொழிலையும் எழுதும் மரபு இலங்கையில் அல்லது தமிழகத்தில் இருந்தது எனப் பேராசிhpயர் சிவசாமி கொண்டமைக்கு அவாpடமிருக்கும் ஆதாரங்கள் எவை?

5. இந்த “எலும்;பு” 2000 வருடங்களைச் சேர்ந்தது என்பதற்குப் புஷ்பரட்ணத்திடமும், பேராசிhpயர் சிவசாமியிடமும் உள்ள ஆதாரங்கள் எவை?

3.3 பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்கு:



பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சங்கு எனப் புஷ்பரட்ணம் அவர்கள் கூறும் சங்கு இருந்த இடமும், அதன் படமும்கீழே தரப்பட்டுள்ளன.


இந்;தச் சங்கிலும் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாகப் புஷ்பரட்ணம் அவர்கள் குறிப்பிட்டுள்ள போதிலும், அதிலுள்ள எழுத்துக்கள் எவை என்பதை அவர் தனது கட்டுரையில் குறிப்பிடவில்லை. இது ஏன்?

அவர் குறிப்பிட்ட சங்கில் எழுத்துக்கள் உண்மையில் காணப்படுகின்றதா, இல்லையா என்பதை ஆராய்ந்தே அறியவேண்டியுள்ளது!

3.4 சுடுமண் கிணறு:


இக்கிணறு பற்றிய விபாpப்பினையும், கருத்துக்களையும், பேராசிhpயர் சத்தியசீலனின் கட்டுரையிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

பேராசிhpயர் சத்தியசீலன் அவர்கள், இந்தச் சுடுமண் கிணறுபற்றிய தனது கருத்தினைத் தனது கட்டுரையின் ஆரம்பத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“..அண்மையில் 2000 வருடங்களுக்கு முற்பட்;டதென்பதை நிச்சயப்படுத்தக்கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட மிகப் பொpய கிணறு ஒன்றை, 20 அடி ஆழம்; கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுக் குழியில்; இருந்து மீட்டெடுத்துள்ளனர். அதன் வடிவமைப்பையும், தொழில் நுட்பத் திறனையும் பார்வையிட்ட அவ்வு+ர்ப் பொதுமக்கள் இவ்வளவு நாகாpகம் படைத்த மக்கள் முன்னொரு காலத்தில் எமது பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் என்பதை அறியும்போது, எமக்குப் பெருமையாகவும், ஆச்சாpயமாகவும் இருப்பதாகக் கூறினர்…”

பேராசிhpயர் சத்தியசீலனின்படி, இந்தச் சுடுமண் கிணறானது, “20 அடி ஆழம் கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுக் குழியில்” இருந்து மீட்கப்பட்டுள்ளது.

எதுவிதத்திலும், இந்தச் சுடுமண் கிணறு மீட்கப்பட்ட வேலைகளின்போது, வெவ்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்ட சில படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இந்தச் சுடுமண் கிணறு பற்றிய மேலதிக விபரங்களை, சத்தியசீலன் தனது கட்டுரையில், புஷ்பரட்ணம் அவர்கள் கூறுவதுபோல் தந்துள்ளார். புஷ்பரட்ணம் அவர்கள் இக்கிணறு பற்றிப் பின்வருமாறு கூறியுள்ளார்:

“சாட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறு, ஏறத்தாழ 20 அடி ஆழத்திலிருந்து மீட்;கப்பட்டது. இது ஐந்து சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நான்கு அடி உயரமான கிணறு ஆகும். இச்சுடுமண் வளையங்கள் ஒவ்வொன்றும் ஒன்;றரை அடி விட்டமும், இரண்டடித் தடிப்பும், ஒரு அடி உயரமும் கொண்டவை….”

இந்த விபாpப்பில் ஏதொ சில பிழைகள் இருப்பதை அவதானிக்கமுடிகிறது.

வளையம் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி விட்டமும், இரண்டடித் தடிப்பும், ஒரு அடி உயரமும் கொண்டவை என்பது, சாத்தியமற்ற விடயங்களாகும். மேலும், ஒரு அடி உயரமான ஐந்து வளையங்கள் மொத்தம் 4 அடி உயரம் எனப் புஷ்பரட்ணம் குறிப்பிட்டுள்ளார். இதிலும்; பிழை காணப்படுவதால், இணையத் தளத்தினர் இந்தச் சுடுமண் கிணறின் வளையங்களை நோpல் பார்வையிடச் சென்றிருந்தனர். இதன் விளைவே, புஷ்பரட்ணம் அவர்களிடமிருந்து சில மேலதிக தகவல்களையும், படங்களையும் பெறக்கூடியதாக இருந்தமையாகும்.

இந்தச் சுடுமண் வளையங்களின் படம் கீழே தரப்பட்டுள்ளது.


இந்த சுடுமண் வளையங்கள் கிணற்றின் எந்தப்பகுதியில், எப்படி, ஏன் வைக்கப்படுகின்றன என்பதற்கான விளக்கத்தைப் புஷ்பரட்ணம் அவர்கள் சத்தியசீலனின் கட்டுரையில் பின்வருமாறு தந்துள்ளார்:

“பொதுவாக இற்றைக்கு 2800 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த பெருங்கற்காலத் திராவிட மக்கள்;, தாம் வாழ்ந்த மணற்பாங்கான இடங்களில் நீரை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கிணறுகள் மழை, காற்று போன்ற காரணங்களால் தூர்ந்து போகாதிருக்க, அக் கிணறுகளைச் சுற்றி சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைத்திருந்தனர். இதற்குத் தமிழகத்தில் வசபசமுத்திரம், அதிரம்பாக்கம், வட இலங்கையில், கிராஞ்சி போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் சிறந்த சான்றுகளாகும்;;…”

புஷ்பரட்ணம் அவர்கள், சுடுமண் வளையங்கள், கிணற்றின் எப்பகுதியில் எப்படி வைக்கப்படுகின்றன என்பதைச் சாpயாக விளக்கவில்லை.

எதுவிதத்திலும், குறிப்பிட்ட கிணற்றின் அடியில் கிடைக்கப்பட்ட இந்த சுடுமண் வளையங்களுக்குக் கீழே, சீரான தளமாக மேற்பக்கம்; செய்யப்பட்ட சயடை வசயஉம இடுகைக்குப் பயன்படுத்தப்படும் ளடநநிநசள போன்ற தடித்த மரக் குற்றிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவற்றுள் ஒன்றினது சிறு பாகமானது வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றிப் புஷ்பரட்ணம் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடவில்லை.

இந்த மரக்குற்றியானது, நீரில் கிடந்து, சற்று மென்மையாக வந்துள்ளபோதும், அது பெருமளவில் பழுதடையாது காணப்படுகிறது. அதில், மரத்தின் முதிர்ச்சியை அறியப் பயன்படும் சiபௌ மிகவும் தெளிவாகக் காணப்படுகின்றன.

இந்தநிலையில், கிணறு வெட்டப்பட்டு, நீர் காணப்பட்டபின்னர், கிணற்றின் அடியில் தடிப்பான சீரான தளமாக அடைக்கப்பட்ட மரக்குற்றிகளின் மேலே இந்தச் சுடுமண் வளயங்கள் வைக்கப்பட்டிருந்தன என்றே கருதவேண்டியுள்ளது.

இந்த மரக் குற்றிகள், சுடுமண் வளையங்கள், கிணற்றின் அடியினுள் இருக்கும் மண்ணினுள் புதைந்து போகாது பார்க்கவும், மண்ணானது தண்ணீர் அள்ளும்; அடிப் பகுதியில்; இல்லாது பார்க்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றே கருதவேண்டியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், புஷ்பரட்ணத்தினது சுடுமண் வளைவின் பயன்பாடு பற்றிய விளக்கம் பிழையானது என்றே கருதவேண்டியுள்ளது.

4. எமது ஆய்வுகள்




4.1 மண்படை அடிப்;படையில் கால நிர்ணயிப்புகள்:

புஷ்பரட்ணம் அவர்களின் கட்டுரையின்படி, ஈமச்சின்னக் கட்டடத்;தில், 6 அடி ஆழத்தினில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்ட ஓடு, எலும்பு, சங்கு என்பவைகள் 2000 வருடங்களுக்கு முற்பட்டவையாகக் காணப்படுகின்றன.

இந்த அடிப்படையில், 20 அடி ஆழத்தினில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் வளையங்கள், குறைந்தது 7000 வருடங்களுக்கு முற்பட்டவையாக இருக்கவேண்டும்.

ஆனால், புஷ்பரட்ணம் அவர்கள், இற்றைக்கு 2800 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த திராவிட மக்கள் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் சுடுமண் வளையங்களை கிணறுகள் தூர்ந்து போகாது பாதுகாக்கப் பயன்படுத்தியிருந்தனர் என்றுள்ளார்.

எதுவிதத்திலும், கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களும், பேராசிhpயர் சத்தியசீலன் அவர்களும், சாட்டியில் கிடைத்த சுடுமண் வளையங்களை 2000 ஆண்டுகள் காலத்தவை என்றுள்ளனர். இது ஏன்? இங்கு 800 வருடங்களை ஒருபுறத்தில் குறைத்துள்ள இவர்கள், மண்படை அடிப்படையில் 7000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்திருக்கவேண்டிய காலத்தை 2000 ஆக்கிவிட்டனர்.

இவைகள் காலக் கணிப்பில் தவறு இருப்பதை உறுதிப்படுத்துகின்றது.

இந்தத் தவறிற்கு விளக்கம் கொடுக்க முற்பட்ட புஷ்பரட்ணம் அவர்கள், பின்வருமாறு பேராசிhpயர் சத்தியசீலனின் கட்டுரையில் கூறியுள்ளார்:

“ஆனால் சாட்டியில் ஈமச் சின்னத்திற்குக்; கீழே இச் சுடுமண் காணப்பட்டமை பெருங்கற்கால பண்பாட்டு மக்களது வாழ்க்கை முறைக்கு முரண்பட்டதாகத் தொpகிறது. இதற்கு முன்பொரு காலத்தில் சுடு மண்ணால் வடிவமைக்கப்பட்ட கிணறு இருந்த இடம், பின்னர் ஏதோ காரணத்தால் கைவிடப்பட்டபோது, அவ்விடம் பிற்காலத்தில் ஈமச் சின்னங்கள் அமைக்கும் மையமாகியிருக்கவேண்டும். இதையே சாட்டி அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.”

புஷ்பரட்ணம் அவர்களின் விளக்கமானது, 6 அடி ஆழத்தில் காணப்பட்ட பிராமி எழுத்து எலும்பு, கறுப்புச் சிவப்பு மட்பாண்ட ஒடு, ஏனையவைகளின் காலமாகக் கூறப்படும் 2000 ஆண்டுக்கும்; 20 அடி ஆழத்தில் காணப்பட்ட சுடுமண் வளையக் கிணற்றின் காலத்திற்குமிடையில் (7000) ஏன் வேறுபாடுகள் இல்லை என்பதற்குத் தகுந்த விளக்கத்தினைக் கொடுக்கவில்லை.

இவைகளைப் பார்க்கும்போது, நாம் தவிர்க்கமுடியாதபடி, சாட்டி அகழ்வாராய்வில் கண்டெடுக்கப்பட்டவை தொடர்பாகப் பின்வரும் முடிவுகளுக்கு வரவேண்டியுள்ளது:

1. எலும்பிலும், மட்பாண்ட ஓட்டிலும், சங்கிலும் பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாகக் கூறப்பட்டமை பிழையானது. பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன என்பதை வைத்துப் புஷ்பரட்ணம் அவர்கள் அவற்றின் காலத்தினை 2000 வருடங்களுக்கு முற்பட்;டவை என்ற முடிவுக்கு வந்தமை பிழையானது. அவை பிற்பட்ட காலத்தவை;

2. கிணற்றினுள் காணப்பட்ட சுடு மண் வளையங்களின் கால நிர்ணயிப்புப் பிழையானது. அவை பிற்பட்ட காலத்தவை;

3. சுடு மண் வளையக் கிணறும், பிராமி எழுத்துக்கள் இருப்பதாகக் கூறப்படும்;

பொருட்களும், கண்டெடுக்கப்பட்ட ஆழங்கள் எனக் கூறப்பட்டவைகள் பிழையானவை.

இவற்றுள் எவைகள் நடைபெற்றுள்ளன என்பதை ஆராய்ந்தறிவது, மிகவும் சுவையானதாகவே இருக்கமுடியும். இதனை அறிய, புஷ்பரட்ணம், சத்தியசீலன், பேராசிhpயர் சிவசாமி என்போர்கள் எவைகளை வைத்துக் காலங்களையும், ஏனையவைகளையும் கூறியுள்ளனரோ, அந்தப் பொருட்களை நாம் சுயமாக ஆராயவேண்டியுள்ளது. ஆகவே, அவை பற்றி ஒவ்வொன்றாக ஆராய்வோம். முதலில் சுடுமண் வளையக் கிணற்றினை ஆராய்வோம்.

4.2 சுடு மண் வளையங்கள்:

சுடு மண் வளையங்கள், பேராசிhpயர் சத்தியசீலனின் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல், ஒன்றரை அடி விட்டமும், இரண்டடித் தடிப்பும் கொண்டவையல்ல. அவற்றின் விட்டம் மூன்று அடிகளாகும். வளையத்தின் தடிப்பு 1 அங்குலமாகும். வளையத்தின் ஒரு புறத்தில் 2 அங்குலத் தடிப்பில் விளிம்பு செய்யப்பட்டுள்ளது. இது, வளையங்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கச் சுலபமாக்கும் நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆய்வுக் கட்டுரையை எழுதிய சத்தியசீலன,; இந்த அளவுகளில் தவறு விட்டாரோ, அல்லது இக்கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையாளர் கட்டுரையைப் படிக்காது அதை வெளியிட்டாரோ தொpயவில்லை. இவர்களுள் எவராயினும்; கட்டுரையைப் படித்திருந்தால், ஒன்றரை அடி விட்டமான சுடு மண் வளையத்தின் தடிப்பு இரண்டு அடியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்ந்திருப்பார்! இரண்டடித் தடிப்பும், ஒன்றரை அடி விட்டமும், ஒரு அடி உயரமும் உடைய மட்பிண்டத்தை, வளையம் எனக் கூறமுடியுமா தொpயவில்லை. மறு புறத்தில், இதைச் சுட்டு, எப்படிக் கையாளப்பட்டிருக்க முடியும் என்பது முக்கிய கேள்வியாகும்..

யாழ்ப்பாணத்தினதும், குறிப்பாகச் சாட்டியினதும் பண்டைய மக்களின் வரலாறு தொடர்பான முக்கிய அகழ்வாய்வாகக் கருதப்படும் இந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றிய விபாpப்புக்களிலேயே இப்படியான தவறுகளைப் பேராசிhpயரும், பத்திரிகையாளரும் விடுவது, இந்த அகழ்வாராய்வு தொடர்பாக ஒருவித நம்பிக்கையீனத்தைத்தான் உருவாக்கும். மேலும், கட்டுரையைப் படிப்பவர்களுக்கு, இவை பெரும் குழப்பத்தினைத்தான் உருவாக்கும்.

இவற்றிலும் மிகவும் கவலைக்குhpயது என்னவென்றால், இன்றுவரை, பேராசிhpயர் சத்தியசீலனோ, கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களோ, அல்லது பத்திரிகை ஆசிhpயரோ, தவறினைத் திருத்தி, பத்திhpகையில் சாpயாக விபரங்களைக் கொடுக்கவில்லை! இப்படியான பொறுப்பற்ற தன்மையானது, தொல்பொருள் ஆராய்ச்சி என்பதற்கே அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினரோ, அல்லது அகழ்வாராய்வில் ஈடுபட்டிருந்த மாணவர்களோ அல்லது எந்தவொரு வாசகரோ இந்தத் தவறினைச் சுட்டிக்காட்டாதமையானது, எதனை எழுதினாலும், இலங்கைத் தமிழ் பேசும் மக்களுள் மிகப் பெரும்பான்மையினர்கள் அவற்றைச் சாpயென ஏற்பர், அல்லது அவர்கள் இவற்றில் உண்மையில் எந்தவித அக்கறையும் இல்லாதவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது. இது துன்பமானது.

யாழ்; குடாநாட்டின் மண் பகுதிகளான பளை, மற்றும் இடங்களிலும், பு+நகாp, மற்றும் மணற் பகுதிகளிலும், கிணறுகளை வெட்டுவதாக மக்கள் பொதுவாகக் கூறுவதில்லை. அவர்கள் கிணற்றினை இறக்குவதாகவே கூறுவர். சுநiகெழசஉநன உழnஉசநவந பயன்பாட்டிற்கு வருமுன்னரும், இப்பகுதிகளில் கிணறுகள் இறக்கப்பட்டு வந்தன. நில அடியில் நீரை அடைந்தபின்னர்தான் கிணறு இறக்கப்படுவதால், இது ஒரு பு+சை – விழாவாகவே இப்பகுதி மக்களால் அண்மைக் காலம்வரை கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

சாட்டிக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சுடுமண் வளையங்கள் மினுக்கமுடைய, முற்றிலும் சிகப்பு நிறமுடையதாகக் காணப்படுகின்றன.

சுடு மண் ஓடுகளைக் கூரை வேயப்; பயன்படுத்தும் முறையானது யாழ்குடாவில் டச்சுக்காலப் பகுதியிலும், பிhpத்தானியர் காலப்பகுதியிலும் க். பி. 1700களின் இறுதியிலும், 1800ஆம் ஆண்டுகளிலும்தான் புகுத்தப்பட்டன.

எதுவிதத்திலும், இந்தக் குறிப்பிட்ட விதமான சுடுமண் வளையங்கள் உருவாக்கும் தொழில் நுணுக்கங்கள்;, மிகவும் பிற்காலத்தில்தான் யாழ் குடாப் பகுதிக்குப் புகுத்தப்பட்டிருக்கமுடியும்.

இக்காலப் பகுதிகளில் 3 அடி விட்டம் கொண்ட பெரும் சுடு மண்பானைகள் செய்யப்பட்டு, அவை நாறல் பாக்கு செய்யவும், எண்ணெய் ஊற்றி வைக்கவும், வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தப் பெரும் பானைகளுள் ஒரு தொகுதியானது, யு -9 பாதை திறக்கப்பட்ட பின்னர், இணுவில், மற்றும் சில கிராமங்களிலிருந்து கொழும்பு வியாபாரிகளால் விலைக்கு வாங்கப்பட்டு, அவர்கள் அவற்றைக் கொழும்பு கொண்டு சென்றிருந்தனர். இப்படியான பொpய பானைகள் சில ஒரு வெளிநாட்டுத் தொல்பொருளாளரால் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது, அவை சுங்க அதிகாhpகளால் கைப்பற்றப்பட்டு, அவை தொடர்பான கருத்துக்களை அவர்கள் கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களிடம் கேட்டபோது, அவர் இந்தச் சுடுமண்; பானைகள் கி. பி. 1700, 1800ஆம் ஆண்டுகள்; வரையானதாக இருக்கமுடியும் எனக் கூறியிருந்தார் என்ற செய்திகள் னுயடைல நேறள பத்திhpகையில் வெளியிடப்பட்டிருந்தது.

இப்படியான 3 அடி விட்டமுடைய சுடு மண் பானைகள் இன்றும் யாழ் குடாநாட்டில் பல காணப்படுகின்றன. உடுவில் என்ற கிராமத்தில், ஒரு தனியாhpடம் 3 அடி விட்டமுடைய பெரும் பானைகள் இருப்பதை இக்கட்டுரையாசிhpயர் அண்மைக்காலத்தில் நேராகப் பார்வையிட்டிருந்தார்! இவற்றைவிட, 2 அடி விட்டத்தையுடைய பானைகளும் அங்கு காணப்பட்டன!

இவையொருபுறமிருக்க, இந்த வளையங்களுக்குக் கீழே வைக்கப்பட்டுக் காணப்படும் மரக் குற்றியின் ஒரு பக்கம், மிகவும் சீரான தளமாகக் காணப்படுகிறது. இந்த மரக்குற்றியானது, ஒரு அடி அகலமுடையதாகக் காணப்படுகிறது. இப்படியான ஒரு மரத்தினை வெட்டுவதற்கு, வாள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கமுடியும்.

பெரிய மரம் வெட்டும் வாள்கள் பயன்படுத்தும் முறையானது, மிகவும் பிந்தியகாலத்தில்தான் யாழ் குடா நாட்டில் புகுத்தப்பட்டது.

இந்தநிலையில், இந்தச் சுடுமண் கிணறானது, பெரும்பாலும் 1800ஆம் ஆண்டுகள் வரையானதாகவே இருக்கவேண்டும்;.

இந்தச் சுடுமண் கிணற்றினை 20 அடி ஆழத்திலிருந்து மீட்க்பட்டதாகக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபோதும், அது 6 அடி ஆழமாகவே உண்மையில் காணப்படுகிறது.

4.3 பிராமி எழுத்துக்கள் காணப்படும் பொருட்கள்:

4.3.1 பிராமி எழுத்துக்கள் உள்ள “மனித எலும்பு”

பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகப் புஷ்பரட்ணம் குறிப்பிட்டுள்ள எலும்பின் படம் கீழே தரப்பட்டுள்ளது.


இப்படத்தினையும், புஷ்பரட்ணம் அவர்களே எமக்குத் தந்தார். அதை நேரடியாகப் பார்த்தபோதும், படத்தினைக் கொம்பியு+ற்றாpன் உதவியுடன் ஆராய்ந்தபோதும், அவர் குறிப்பிட்ட பிராமி எழுத்துக்களையோ, அல்லது பாகன் என்ற சொல்லையோ அடையாளங்காண முடியவில்லை. இங்கு தரப்பட்டுள்ள படத்தினை ஆராய்ந்து, எவராவது கண்டறியக்கூடியதாக இருக்கும் எழுத்துக்களையும், அவற்றின் வாசிப்பினையும் அறியக் கொடுத்தால், மிகவும் உதவியாக இருக்கும்.



4.3.2 பிராமி எழுத்துக்கள் உள்ள சங்கு:

கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள் பிராமி எழுத்துக்கள் உள்ள சங்கு எனக் கூறியுள்ள சங்கின் படம் கீழே தரப்பட்டுள்ளது. இந்தப் படமும்;, புஷ்பரட்ணம் அவர்களால் தரப்பட்டதே.


இந்தப் படத்தில் காணப்படும் சங்கில் பிராமி எழுத்துக்கள் உள்ளனவா, இல்லையா என்பதை வாசகர்களாலேயே அறிந்துகொள்ளமுடியும்.

துரதிஷ்டவசமாக, கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள் இதிலுள்ள பிராமி எழுத்துக்கள் எத்தனை, அவை எவையெவை என்பதையெல்லாம் தனது கட்டுரைகளில் குறிப்பிடவேயில்லை. உழஅpரவநச இன் உதவிகொண்டு இந்தப் படத்தினைப் பலவாறு ஆராய்தபோதும், அதில் எழுத்துக்களோ, அல்லது பிராமி எழுத்துக்களோ இருப்பதை அறியமுடியவில்லை. இந்தப் படத்தினை வைத்து, ஆராய்வாளர்கள் ஆராய்ந்து, எமக்கு இதுபற்றி அறியக்கொடுத்தால் பொpதும் உதவியாகவே இருக்கும்.


4.3.3 பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு:

பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடு எனப் புஷ்பரட்ணம் அவர்களால் குறிப்பிடப்பட்டதின் படம் கீழே தரப்பட்டுள்ளது.


இதில் அவர் மீன் அடையாளமும், தூண்டில் அடையாளமும் காணப்படுவதாகவும், அவற்றிற்குக் கீழே, பிராமி எழுத்துக்கள் காணப்படுவதாகவும் கூறி, அந்த எழுத்துக்களை ராசா என வாசிக்க முடிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், புஷ்பரட்ணம் அவர்கள் நமது ஈழநாடு பத்திhpகையில் வெளியிட்டிருந்த படத்தினை ஆராய்ந்தால், ஒருவர், அதில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் கீழே காட்டப்பட்டுள்ளவாறு இருப்பதைக் காண முடியும்;. இந்தத் தமிழ் எழுத்துக்களுள் டி என்ற எழுத்தினையும், ட் என்ற எழுத்தினையும், ஒருவர் வெற்றுக் கண்ணால் எந்தவித பிரச்சனையுமின்றி அடையாளங்காண முடியும். எழுத்துக்களை ஆராயும்போது, தேச என்பதைத் தொடர்ந்து “சாட்டி” எனவும், அதைத் தொடர்ந்து திட்டம்; எனவும் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.

இவற்றைவிட, தேச என்ற எழுத்துக்களுக்கு மேலே, ஒப்பிடுகையில் பொpய எழுத்தில் உத் என்பவையும், அவற்றைத் தொடர்ந்துவரும் தர என்பவை சிறிதாகவும் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.

இந்தத் தமிழ் எழுத்துக்களில் கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், இவற்றில் குற்றுக்கள் இடப்பட்டிருப்பதாகும். குற்று இடும் முறையானது, தமிழில் மிகவும் அண்மைக் காலங்களில் புகுத்தப்பட்டதாகும்.

இந்தநிலையில், கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள், துண்டில், மீன் என்பவைகளுக்குக் கீழே பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன எனக் கூறியிருப்பது முற்றிலும் பொய்யானது!

அதிலும் கூடிய பொய் என்னவென்றால், அதில் ராசா என்பதை வாசிக்கமுடிகிறது எனக் கூறியிருப்பதாகும்!

இந்தநிலையில், பிராமி எழுத்துக்களின் அடிப்படையில் கலாநிதி புஷ்பரட்ணம் அவர்கள் இந்தப் பொருளின் காலத்தினை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கூறுவது முற்றிலும் பிழையானது, ஏமாற்றானது!

இவைகளைவிட, சாட்டி என்ற எழுத்துகளுக்;கும், திட்டம் எனற எழுத்துக்களு;கும் மேலாக, கிணத்து எனவும் எழுதப்பட்டீருப்பதையும் அவதானிக்கமுடிகிறது!

முடிவுரை:

இதுவரை ஆராய்தவைகள், சாட்டி தொல்;லியல் அகழ்வாராய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலங்கள் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என பிராமி எழுத்துக்கள் உள்ளன என்பதன் அடிப்படையில்; கூறுவதற்குத் விஞ்ஞான hPதியிலான ஆதாரங்கள் இல்லாதே காணப்படுகிறது. மேலும், தமிழ் எழுத்துக்களில் குற்றுக்கள் காணப்படுவதனால்;, இந்தத் தொல்பொருட்கள் கி. பி. 14 - 15ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாகவே இருக்கமுடியும்.

மேலும், சுடுமண் வளையக் கிணறானது, டச்சுக் காலத்தையதாக அல்லது பிhpத்தானிய காலத்தையதாகவே இருக்கவேண்டும்.

ஓட்டு மொத்தத்தில், கலாநிதி புஷ்பரட்ணம் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தொல்லியல் கற்கை நெறி மாணவர்களும், தமது முடிவுகளை உறுதிப்படுத்த, வேறு, விஞ்ஞான hPதியிலான ஆதாரங்களை முன்வைக்கவேண்டியுள்ளது. இது சாத்தியமாகுமா? பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்!

A. S. Uthayakumar B.Sc. (Mech. Eng.)
K.Pathytharan B.Sc. (B.E.)

www.tamilresearchandnews.com

0 comments:

Post a Comment

Text Widget