தமிழ் நூல்களின் வெளியீட்டு வரிசையில் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் “இலங்கைத் தமிழர் தேச வழமைகளும், சமூக வழமைகளும்” எனும் நூல்
இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்துவந்த தமிழ் பேசும் சமூகங்கள் பின்பற்றி வந்த வழமைகள் பற்றிய ஆராய்வும், இந்த வழமைகளின் மூலங்கள் பற்றிய ஆய்வும், வழமைகள் சட்டமாக்கப்பட்டதன் வரலாறுகளும், அவைகள் வழக்கிலிருந்து நீக்கப்பட்டதன் வரலாறும், இந்தச் சட்டங்களுடாகப் பல்வேறு சமூகங்கள் பற்றி ஏற்படுத்தக்கூடிய விளக்கமும், எழுதப்பட்ட இந்தச் சட்டங்களுடாகத் தமிழ் எழுத்து மொழியின் அன்றைய நிலையும், தமிழ் எழுத்துமொழி இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ளாகி வந்துள்ள மாற்றங்களும், மற்றும் பலவும், இன்;றுவரை விஞ்ஞான ரீதியான ஆய்வுகளுக்கு உட்;படுத்தப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். இவைகளுள் சிலவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் வெளிநாட்டவர்களாலும், உள்ளுர் ஆராய்வாளர்களாலும் எழுதப்பட்டுள்ளன என்ற வாதம் சிலரால் அவசரமாக முன்வைக்கப்படலாம். ஆனால், அந்த ஆய்வுகள் விஞ்ஞானத் தன்மையற்றவையாகவும், கற்பனாவாதம் நிறைந்தவையாகவும்; காணப்படுவதுடன்; வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் பல்வேறு விடயங்களும் இவைகளுடாக ஒருவித முழுமைத் தன்மையுடையதாக ஆராயப்படவில்லை என்பதுதான் மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.
இந்த விடயங்கள் பற்றிய ஆய்வுகளுக்கு, முதலில் தேவைப்படுபவை, இவைகள் தொடர்பான மூல ஆவணங்கள் ஆகும்.
துரதிஷ்டவசமாக, 2001ஆம் ஆண்டு வரை, தமிழ் பேசும் சமூகங்களின் வழமைகள் பற்றிய மூல ஆவணங்கள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு, ஒரு நூலானது தமிழில் வெளியிடப்படவில்லை.
தமிழர்களுள் தம்மைச் சமூக விஞ்ஞானிகள் எனக் கூறிக்கொண்டவர்கள், அல்லது காட்டிக் கொண்டவர்கள், இதனைச் செய்யாது விட்டுவந்தனர். இது ஏன் என்பது ஆராயப்படவேண்டிய ஒன்றே.
இக்குறையை நீக்கும் ஒருவித முயற்சிபோல், பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள், “இலங்கைத் தமிழர் தேச வழமைகளும், சமூக வழமைகளும்” என்ற நூலை,2001ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் வெளியிட்டிருந்தார்.
இப்படியானவொரு நூலானது, இரண்டு விதமாக வெளியிடப்படுவது, பயனள்ளதாக அமையும். அவையாவன:
1. மூல ஆவணங்களையும், அந்த மூல ஆவணங்களில் கூறப்பட்டு இருப்பவைகளை இன்றைய அச்செழுத்துக்களிலும் கொடுத்தும், நூலை வேளியிடுவது;
2. முதலாவதுடன், மேலதிக விபரங்களையும், விளக்கங்;களையும், தொகுப்பாசிரியர் கொடுத்து நூலை வெளியிடுவது.
இவற்றில் முதலாவது விதமாக வெளியிடப்படும் நூலானது, இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் பற்றிய ஆய்வுகளைச் சுயமாகச் செய்வோருக்கு உகந்தது. மேலும், மூல ஆவணங்களில் எழுதப்பட்டிருப்பவைகளைப் படித்து, திரும்ப எழுதிப் பதிப்;பதில் ஏற்படக்கூடிய தவறுகள் இந்த வகை வாசகர்களால் திருத்தம் செய்யப்பட, இப்படியான வெளியீடு உதவும். இது, திருத்தப்பட்ட வெளியீடு பின்னர் வெளியிடப்பட உதவும்.
இரண்;டாவது விதமான வெளியீடானது, சுய ஆய்வில் ஈடுபடுவோருக்கும், சுய ஆய்வில் ஈடு படாது, நூலை வெளியிட்டவரது கருத்துக்களையும், விளக்கங்களையும் அறிய விரும்புபவர்களுக்கும் பயனாகும்.
ஆனால், பேராசிரியர் பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த நூலானது, இந்த இரண்டு வகையான நூல்களுள்ளும் பொருந்தமாட்டாத ஒரு வகையாகவே உள்ளது!
புதிப்;புரையில் கூறப்பட்டிருப்பவைகள்:
பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் இந்த நூலை, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, வெளியிட்டுள்ளது. அந்த நூலுக்கு எழுதப்பட்டுள்ள “பதிப்புரை” என்பதில், பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
“இத் தொகுதியில் வெளிவரும் ஆவணங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சுவடுகளாகும். அவற்;றிலே முக்குவர் சட்டம் தவிர்ந்த ஏனைய யாவும் பிரித்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்துச் சுவடிகளிலுள்ள மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்நூலாசிரியர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்;;படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில் 1967இல், அவற்றின் புகைப் படங்களைப் பெற்றிருந்தார். அவற்றுள்ளும் தேசவழமை தவர்ந்த பிற ஆவணங்களை வேறெவரும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முக்குவச் சட்டம் பிறிற்றோ எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமாகும். மூலமான ஆங்கில நூல் கிடைத்தற்;கு அரிதாகிவிட்டது. அது முதன்முறையாக இந்நூலாசிரியரினாலே மொழிபெயர்க்கப்பட்டு இத்தொகுதியிலே சேர்க்கப்பட்டுள்ளது.”
(இதில் சில பகுதிகள் இக்கட்டுரை ஆசிரியனாலேதான் டிழடன ஆக்கப்;பட்டவை.)
“பதிப்புரை” என்பதைப் படித்த ஒருவர், அதில்: முக்குவர் சட்டம் தவிர்ந்த ஏனைய யாவும் பிரித்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்துச் சுவடிகளிலுள்ள மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்நூலாசிரியர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்;படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில் 1967இல், அவற்றின் புகைப் படங்களைப் பெற்றிருந்தார்” என்பதைக் கண்டபின்னர், 200 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் எல்லாம் எப்படித் தோற்றமளிக்கும் என்பதை அறியும் ஆவலில், நூலின் “மூல ஆவணங்கள்” என்ற பகுதியையே புரட்டிப் பார்ப்பார்.
“மூல ஆவணங்கள்” என்ற பகுதியானது, நூலின் பக்கம் - 353இல் ஆரம்பமாகிறது.
அதில், ஐந்து ஆவணங்களின் போட்டோ பிரதிகள் காணப்படுகின்றன.
அவையாவன:
1. இரண்டாம் அற்த்திக்கல்;;… .(பக்கம் - 353 முதல்; 358);
2. புத்தளத்து வௌ;ளாளச் சாதியினருக்குள்ளேயிப்பொ நடந்துவருகிற வழமை (பக்கம் - 359 முதல் 361);
3. கற்பிட்டியின் செட்டி வௌ;ளாளர்….இப்பொ நடந்து வருகின்ற வழமைகள் (பக்கம் - 362 முதல் 364வரை);
4. … முக்குவாpன் சாதி வழமைகள் … (பக்கம் -- 365 முதல் 366);
5. தூத்துக்குடி முதல் இந்த இடங்களில் எங்கள் பரதர் சாதியில் எங்கள் …பக்கம் - 367 முதல் 370 வரை).
இவைகள் தவிர்ந்த வேறு எந்த ஆவணங்களினது போட்டோ பிரதிகளும், “மூல ஆவணங்கள்;” என்ற பகுதியில் காணப்படவில்லை!
இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றினதும் முதல் பக்கமும், கடைசிப் பக்கமும், இங்கே தரப்படுகின்றன. இவற்றை அயபகைல பண்ணிப் பார்ப்பதூடாகச் சில தகவல்களை வாசகர்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.
சில உதாரணங்களாக:
1. முதலாவது ஆவணத்தின் ஆரம்பம் தரப்படவில்லை. இந்த ஆவணம் தயாரிக்கப்பட்ட ஆண்டு, திகதி என்பவை தமிழ் எழுத்து இலக்கங்களில் தரப்பட்டுள்ளதுடன், ஆவணத்தைத் தயாரித்தவாpன் பெயரானது எழுதப்பட்டுள்ளது;
2. இந்த ஆவணங்களில் “தேசவழமைச் சட்டம்” என்பதன் போட்டோ பிரதி இல்லை.
இந்தநிலையில், இந்த நூலின் பதிப்புரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக ஒருவித ஐயப்பாடும், சில கேள்விகளும் எழுகின்றன.
அவையாவன:
1. பேராசிரியர் பத்மநாதன் அவர்கள், தேசவழமைச் சட்டம் என்பதை எதிலிருந்து பெற்றுத் தந்துள்ளார்? பதிப்புரையில் குறிப்பிட்டிருப்பதுபோல், பிரித்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்துச் சுவடிகளிலுள்ள மூலப்பிரதிகளின் புகைப்படங்களை எடுத்துப் பெற்றிருக்காவிடின், அவர் எதிலிருந்து அதனைப் பெற்றிருந்தார்? ஏன் அந்த விபரத்தைப் பதிப்பாளர் தரவில்லை?
2. அவர் தந்துள்ள தேச வழமைச் சட்டம் சாpயானது என்பதை, எப்படி நாம் உறுதிப்படுத்துவது?
3. பேராசிரியர் பத்மநாதன் அவர்களின் நூலில் பிறிற்;றோவின் நூலின் பிரதியையும் பின்னிணைப்பாகத் தரப்படவில்லை. இந்தநிலையில், அவரது தமிழாக்கம் உண்மையான மூலப்பரதியிலிருந்து பெற்றுத் தரப்பட்டுள்ளது என்பதற்கு ஆதாரமுள்ளதா?
4. தேச வழமைச் சட்டத்தினது பிரதி தரப்படாமலே, பதிப்புரையில் பிரித்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. இது, இந்த நூலின் நம்பகத் தன்மை பற்றிய கேள்வியை எழுப்ப வைக்கிறது.
இந்தநிலையில், இவைபற்றிய சாpயான தகவல்களைப் பேராசிhpயரான பத்மநாதன் கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பில், நூலைப் படிக்கும் ஆவலே, வாசகர்களுக்கு ஏற்படும்.
இது ஒருவரை, இந்த நூலுக்குப் பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் எழுதியுள்ள “அறிமுகம்” என்பதையே படிக்க வைக்கும்.
“அறிமுகம்;” என்பதில் பேராசிhpயர் பத்மநாதன் கூறியிருப்பவை
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் “அறிமுகம்”; என்பதன் ஆரம்பத்தில், “இந்நூலில் அடங்கியுள்ள ஆவணங்கள்” என்பதன்கீழ், பின்வருமாறு கூறியுள்ளார்:
“இலங்கைத் தமிழர் தேச வழமைகளும் சமூக வழமைகளும் என்னும் இந்நூல் ஒரு தொகுப்பு நூலாகும். இது பழைய ஆவணங்களின் தொகுப்பு நூல்; அதுவும் ஒரு புதிய முறையில் அமைந்த தொகுப்பு நூல்;. இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லாம்; பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டவை. லண்டன் பல்கலைக் கழகத்திலே பட்ட மேற்படிப்புக்களை நாம் மேற்கொண்டிருந்த காலத்திலே, 1967ஆம் ஆண்டிலே, அவற்றின் நிழல் படங்களைப் பெற்றிருந்தோம். அவற்றுள் முக்குவர் சாதி வழமை, திருகோணமலைத் தமிழாpன் வழமைகள் என்பன பற்றிய ஆவணங்களைப் பல வருடங்களுக்கு முன்; சில விளக்கக் குறிப்புகளோடு வெளியிட்டோம்.1 “
அடிக்குறிப்பு 1 இல் (பக்கம் -- 30) அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
1. சி. பத்மநாதன், “முக்குவர் சாதி வழமை”.
ளு. Pயவாஅயயெவாயnஇ வுhந டுயறள யனெ ஊரளவழஅள ழக வாந வுயஅடைள ழக வுசinஉழஅயடநநஇ நேற ஊநவெரசல டீழழம ர்ழரளந (P) டுவனஇ ஆயனசயளஇ 1994இ pp.40”
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள், “இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லாம் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டவை. லண்டன் பல்கலைக் கழகத்திலே பட்ட மேற்படிப்புக்களை நாம் மேற்கொண்டிருந்த காலத்திலே, 1967ஆம் ஆண்டிலே, அவற்றின் நிழல் படங்களைப் பெற்றிருந்தோம்” எனக் கூறியிருப்பமை, குழப்பங்களை மேலும் அதிகாpத்துள்ளது.
பதிப்புரை என்பதில்,
“அவற்;றிலே முக்குவர் சட்டம் தவிர்ந்த ஏனைய யாவும் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்துச் சுவடிகளிலுள்ள மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்நூலாசிhpயர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்;;படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில் 1967இல், அவற்றின் புகைப் படங்களைப் பெற்றிருந்தார்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், பேராசிhpயர் பத்மநாதனோ தனது அறிமுகம் என்பதில்: “இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லாம் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டவை. லண்டன் பல்கலைக் கழகத்திலே பட்ட மேற்படிப்புக்களை நாம் மேற்கொண்டிருந்த காலத்திலே, 1967ஆம் ஆண்டிலே, அவற்றின் நிழல் படங்களைப் பெற்;றிருந்தோம்” என்றுள்ளார்!
இந்த இரண்டு வேறுபட்ட கூற்றுகளில், வாசகர் ஒருவர் எவர் உண்மையைக் கூறியுள்ளார், எவர் பொய் கூறியுளளார் எனக் கொள்ளமுடியும்?
பேராசிhpயர் ஒருவர் கூறியிருப்பதைத்தான், சாதாரண வாசகர் ஒருவர் உண்மையானது, சாpயானது எனக் கொள்ளமுடியும்!
இந்தநிலையில், பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் மேலே குறிப்பிட்ட 5 ஆவணங்களையும், தேச வழமைச் சட்டத்தின் போட்டோ பிரதியையும், முக்குவச் சட்டத்தின்; பிரதியையும், பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்தில் போட்டோ பிரதிகள் செய்து பெற்றுக்கொண்டார் என்றே கருதவேண்டியுள்ளது.
இப்படித்; தேச வழமைச் சட்டம், முக்குவர்; சட்டம் என்பவைகளின் போட்டோ பிரதிகளை 1967ஆம் ஆண்டிலேயே பிhpத்தானியாவிலிருந்து பெற்று வந்திருந்த பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள், 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருந்த அந்தச் சட்டங்களின் பிரதிகளை இன்றைய வாசகர்கள் கண்டு இன்புற, ஆராய, அவற்றின் தொடக்கப் பக்கங்களையும், முடிவுகளையுமாவது தனது நூலில் கொடுத்திருக்கலாமே? ஏன் அவர் அவ்விரு சட்டங்களது போட்டோ பிரதிகளையும் தனது நூலில் கொடுக்கவில்லை?
இங்கொரு முக்கிய கேள்வி எழுகிறது.
ஒரு வரலாற்றுப் பேராசிhpயர், தனது நூலில் தன்னிடமிருக்கும் முக்கிய மூல ஆவணங்களின் பிரதிகளைக் கொடுக்காது விடயங்கள்பற்றி எழுதுவாரா, ஆராய்வாரா? அதுவும், 1967ஆம் ஆண்டிலேயே அவற்றை லண்டனில் பெற்றுவந்துள்ள நிலையிலும், அவற்றைத் தனது நூலில் கொடுக்க மறப்பாரா?
இல்லவே இல்லை!
அப்படியாயின், தேசவழமைச் சட்டம், முக்குவர் சட்டம் என்பவைகளைப் பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள், தனது அறிமுகம் என்பதில் குறிப்பிட்டதுபோல,; “இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லாம் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டவை. லண்டன் பல்கலைக் கழகத்திலே பட்ட மேற்படிப்புக்களை நாம் மேற்கொண்டிருந்த காலத்திலே, 1967ஆம் ஆண்டிலே, அவற்றின் நிழல் படங்களைப் பெற்;றிருந்தோம்” எனக் கூறியிருந்தமைக்கு மாறாக, வேறு மூலங்களில் இருந்து பெற்றே வெளியிட்டிருக்கவேண்டும்!
இந்தநிலையில், அவர் எவற்றிலிருந்து, எங்கிருந்து இந்த இரு சட்டங்களின் மூலப் பிரதிகளையும் பெற்றுத் தனது நூலில் பிரசுhpத்திருந்தார் என்ற கேள்வி எழுகிறது.
பேராசிhpயர் பத்மநாதன் எவற்றிலிருந்து பெற்று, தேசவழமை, முக்குவற் சட்டங்களைத் தனது நூலில் தந்துள்ளார்?
பேராசிhpயர் பத்மநாதனும், பதிப்புரை என்பதை எழுதியவரும், தேசவழமைச் சட்டம், முக்குவர் சட்டம் என்பவைகளின் மூல ஆவணங்கள் தொடர்பாக முரண்பட்ட தகவல்களைத் தந்திருப்பதும்; மூல ஆவணங்கள் என்பதன்கீழ் இந்த இரண்டு சட்டங்களினது போட்டோ பிரதிகளின் பிரதிகளைத் தராது விட்டிருப்பமையும், இருவரும் சில விடயங்களை மூடி மறைக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்ப வைக்கிறது. மேலும், அவர்கள் இந்த இரு சட்டங்கள் தொடர்பான மூலப் பிரதிகள் பற்றி உண்மைக்குப் புறம்பான தகவல்களையே வாசகர்களுக்குக் கொடுத்துள்ளனரா என்ற கேள்வியையும் எழுப்பவைக்கிறது.
இந்தநிலையில், பேராசிhpயர் எந்தப் பிரதிகளிலிருந்து தேச வழமைச் சட்டத்தையும், முக்குவச் சட்டத்தையும், தான் பிhpத்தானியாவில் 1967ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்ட புகைப்படப் பிரதி எனக் கூறி, தனது நூலில் பிரசுhpத்துள்ளார் என்பதை ஆராய்ந்து அறியவேண்டியுள்ளது.
இவற்றை ஆராய்ந்து அறிய, தேசவழமைச் சட்டமானது முன்னர் எவராலும் தமிழ் மொழியில் பிரசுhpக்கப்பட்டிருந்ததா என்பதையும்; முக்குவர்; சட்டம் தொகுக்கப்பட்டமை பற்றியும், அதன் பிரசுhpப்புக்களும் முன்னர் நடைபெற்றுள்ளதா என்பதை பற்றியும் ஆராய்ந்தறியவேண்டும். மேலும், பேராசிhpயரது நூலையும் பயன்படுத்தவேண்டியுள்ளது.
தமிழ் மொழியில் தேசவழமைச் சட்ட வெளியீடு:
தேச வழமைச் சட்டம் பற்றிய பல ஆங்கில நூல்களில்;, 1862ஆம் ஆண்டில் ர்நசெல குசயnஉளை ஆரவரமளையெ என்பவர் தேசவழமைச் சட்டம்பற்றி நூலொன்றினை வெளியிட்டிருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், யாழ் குடாவில் அந்;த நூலின் பிரதியைப் பெறுவது முடியாத காhpயமாகவே இருந்தது. ஆனால், பல இடங்களிலும் தேடி அலைந்து பார்த்தபொழுது. ஆந்த நூலின் இரண்டு பிரதிகள் மாத்திரம்தான் யாழ்குடாவில் கிடைக்கக்கூடியதாக இருந்தது. அவறிறல் ஒன்றானது, யாழ் பல்கலைக் கழகம் சார்ந்த ஒருவரால் 1990ஆம் ஆண்டுகளில் உhpமையாளாpடமிருந்து பெறப்பட்டுள்ளது.
ஆனால், கொழும்பு பல்கலைக் கழக நூலகம், மற்றும் சில நூலகங்களிலும்; சில புகழ்பெற்ற முது வழக்கறிஞர்களின் நூல் சேகாpப்புக்களிலும் இந்த நூலின் பிரதிகள் இருப்பதாகப் பின்னர் அறியமுடிந்தது.
யாழ்;ப்பாணம், பாசையு+ரைச் சேர்ந்த ஹென்றி பிரான்சிஸ் முத்துகிஸ்னா என்ற யுனஎழஉயவந, 1862ஆம் ஆண்டில் தேச வழமை என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தபோதும், அதன் பின்இணைப்பாக, தேசவழமைச் சட்டத்தினைத் தமிழ் மொழியிலும் பிரசுhpத்துள்ளார்.
அவரது நூலின் முதல் பக்கம், தமிழ் மொழிப் பின்னிணைப்பின் முதல் பக்கம், முகவுரை, தேச வழமைச் சட்டத்தின் முதல் பக்கம் என்பவைகளின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் தேச வழமைச் சட்டத்தின் போட்டோ பிரதியை பிhpத்தானியாவிலிருந்து பெற்று வந்திருந்தால், அந்தப் பிரதியியில் காணப்படும் தேச வழமைச் சட்டத்திற்கும், முத்துக்கிஸ்னா 1862ஆம் ஆண்டில் பிரசுhpத்த தேச வழமைச் சட்டத்திற்கும் ஒற்றுமை உள்ளதா, வேறுபாடுகள் உள்ளனவா; தமிழ்ச் செற்களின் பயன்பாடுகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றனவா, ஏனையவைகளைத் தனது நூலில் குறிப்பிடுவது மிக முக்கியமாகும்.
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் பக்கம் - 6இல், முத்துக்கிஸ்னாவின் நூல்பற்றி விபரங்களைத் தந்துமுள்ளார். ஆனால், பக்கம் -4 இல் அவர், “ஆவணங்களை மூலப்பிரதிகளில் உள்ளவாறு இங்கு வெளியிடுகிறோம்” எனக் கூறியிருப்பமை, ஒருவரைப் பேராசிhpயர் தனது நூலில் பிரசுhpத்துள்ள தமிழ் மொழித் தேசவழமைச் சட்டத்தினையும், முத்துக்கிஸ்னாவின் வெளியீட்டில் காணப்படும் தமிழ் மொழித் தேசவழமைச சட்டத்தையும் ஒப்பிட்டு ஆராய நிர்ப்பந்திக்கிறது.
தேச வழமைச் சட்டம் பற்றிய “அறிமுகம்” என்பதில், பக்கம் - 5இல், தேச வழமைமையானது தொகுத்தெழுதப்பட்டமை தொடர்பாக ஊடயளள ஐளயயஉள என்ற யாழ்ப்பண இராச்சியத்திலே திசாவையாக இருந்தவர் எழுதியதை, பேராசிhpயர் பத்மநாதன் தனது நூலில் தந்துள்ளார். அது, முத்துக்கிஸ்னாவினது நூலிலிருந்து பெறப்பட்டுக் கீழே தரப்பட்டுள்ளது.
பேராசிhpயர் பத்மநாதன் தனது நூலில் இப்பகுதியை முத்துக்கிஸ்னாவினது நூலிலிருந்து பெற்றே தந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை அவர் அடிக்குறிப்பு 2 இல் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இங்கு எழும் கேள்வி என்னவென்றால், பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள், தேச வழமைச் சட்டத்தினை 1967ஆம் ஆண்டில் பிhpத்தானியாவில் புகைப்படம் எடுத்திருந்தால், அவர் ஏன் முத்துக்கிஸ்னாவின் நூலில் இருந்து அதன் முகவுரையினைப் பெற்றுத் தனது நூலில் தரவேண்டும்?
ஆகவே, பேராசிhpயர் பத்மநாதனும், அவரது நூலைப் பதிப்பித்தமைக்குப் பதிப்புரை எழுதியரும், தேசவழமை சட்டத்தின் மூலப்பிரதி தொடர்பாகப் பொய் கூறியுள்ளனர் என்பது இதனூடாக உறுதிப்டுத்தப்படுகிறது.
இதை மேலும் உறுதிப்படுத்துவதாயின், தேச வழமைச் சட்டத்தினை, முத்துக்கிஸ்னாவின் நூலில் இருந்து பெற்றுத்தான் பேராசிhpயர் பத்மநாதன் தந்துள்ளாரா என்பதை, பேராசிhpயர் பத்மநாதனின் நூலில் கொடுக்கப்பட்டுள்ள தேச வழமையையும், முத்துக்கிஸ்னாவினது நூலில் கொடுக்கப்பட்டுள்ள தேச வழமையையும் ஒப்பிட்டு ஆராயவேண்டும்.
அவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்தால், பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் அவருது நூலில் தந்துள்ள தேச வழமைச் சட்டமானது, முத்துக்கிஸ்னாவின் நூலில் இருந்து அப்படியே பெறப்பட்டுத் தரப்பட்டுள்ளது என்பது அசைக்க முடியாதபடி உறுதியாகிறது.
உதாரணமாக, தேசவழமையின் ஆரம்பப்பகுதியானது முத்துக்கிஸ்னாவின் நூலில் இருந்து பெறப்பட்டு, இங்கு தரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், “அவற்;றிலே முக்குவர் சட்டம் தவிர்ந்த ஏனைய யாவும் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்துச் சுவடிகளிலுள்ள மூலப்பிரதிகளை ஆதாரமாகக் கொண்டவை. இந்நூலாசிhpயர் லண்டன் பல்கலைக் கழகத்தில் பட்டப்;;படிப்பை மேற்கொண்டிருந்த காலத்தில் 1967இல், அவற்றின் புகைப் படங்களைப் பெற்றிருந்தார். அவற்றுள்ளும் தேசவழமை தவர்ந்த பிற ஆவணங்களை வேறெவரும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது” என “இலங்கைத் தமிழர் தேச வழமைகளும், சமூக வழமைகளும்” என்ற நூலின் பதிப்புரையில் கூறப்பட்டிருப்பதும்; “இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லாம் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டவை. லண்டன் பல்கலைக் கழகத்திலே பட்ட மேற்படிப்புக்களை நாம் மேற்கொண்டிருந்த காலத்திலே, 1967ஆம் ஆண்டிலே, அவற்றின் நிழல் படங்களைப் பெற்;றிருந்தோம்” எனப் பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் தான் எழுதிய அறிமுகம்; என்பதில் கூறியிருப்பதும், முற்றிலும் பொய்யானதாகும்.
தமிழில்; முக்குவா; சட்டம்:
முக்குவர் சட்டம் என்னும் சிறிய நூலானது, 1876ஆம் ஆண்டில் ஊ. டீசவைழ என்பவரால் எழுதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நூலானது ஆட்சியாளர்களால் எழுத்;துவடிவில் எழுதி வைக்கப்பட்ட சட்ட நூலின் பிரதி அல்ல.
இது, மட்க்களப்புப் பகுதியில் வழக்கறிஞராக இருந்துவந்த பிறிற்றோ அவர்கள், வழக்குத் தீர்ப்புகளின் அடிப்படையிலும், பலவற்றைப் பலாpடமிருந்து அறிந்தும் முக்குவச் சட்டம் என எழுதப்பட்ட நூலாகும். இது ஒரு தடவை மாத்திரமே பிரசுhpக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்த நூலின் பிரதியைப் பெறமுடியாதிருந்தது.
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள், அறிமுகம் என்பதன்; ஆரம்பத்தில (பக்கம் - 3);: “இதில் அடங்கியுள்ள ஆவணங்கள் எல்லாம் பிhpத்தானிய ஆவணச் சுவடிகள் நிலையத்திலுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டவை. லண்டன் பல்கலைக் கழகத்திலே பட்ட மேற்படிப்புக்களை நாம் மேற்கொண்டிருந்த காலத்திலே, 1967ஆம் ஆண்டிலே, அவற்றின் நிழல் படங்களைப் பெற்;றிருந்தோம்” எனக் கூறியிருந்தபோதும், அதே அறிமுகம் என்பதில் பக்கம் -12இல் முக்குவர் சட்டம் பற்றிப் பேசுகையில், பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“அந்நூல் ஒரு தடவை மட்டுமே பிரசுரமாகியுள்ளது. அதுவும் இப்போது கிடைத்தற்கு அhpதாகிவிட்டது. அது இதுவரை எவராலுந் தமிழில் மொழிபெயர்க்கபடவில்லை. மட்டக்களப்புத் தமிழாpன் சமுதாயவமைப்பு, பு+ர்வீக வழமைகள் என்பன பற்றிய ஓர் அதிமுக்கியமான வரலாற்று ஆவணம் என்பதால், அதனைத் தமிழிலே மொழிபெயர்த்து இங்கு நாலாம் பகுதியிலே சேர்த்துள்ளோம்….”
தானே முதலில் கூறியதை, பேராசிhpயர் பின்னர் தானே நிராகாpத்துள்ளார்! இது, பேராசிhpயர் தனது நூலை திருத்துவதற்காகவாவது கவனமாகப் பார்க்கவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இப்படியான சூழ்நிலையானது, அந்தப் புத்தகத்தினை மிகவும் அவசர அவசரமாக வெளியிடவேண்டிய நெருக்குவாரம் பேராசிhpயர் பத்மநாதனுக்கும், பதிப்பாளருக்கும் ஏற்பட்டிருந்ததையே வலியுறுத்துகிறது.
இப்படியான நெருக்குவாரம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்ததா? இந்த நெருக்குவாரம் ஏன், எப்படி உருவானது?
இதுவும் ஆராயப்படவேண்டியதொன்றாகும்!
இது பற்றி ஆராய்ந்தபோது, சில சுவாரிஷியமான விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுத் துறை சாராத ஒரு பேராசிhpயர், தேச வழமைச் சட்டத்தின் போட்டோப் பிரதிகளைக் கொழும்பிலிருந்து பெற்று, அதன் தமிழ் வெளியீட்டினை மீண்டும் பிரசுhpக்கும் வேலைகளைத் தானாகவே செய்துவந்தார். கொம்பியு+ற்றர்கொண்டு அதனை மீண்டும் பதித்து, அதனைப் பிரசுhpக்க அவர் முற்பட்டுவந்தார். ஆனால், அதனைப் பிரசுhpக்க, அவருக்கு நிதி உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. இதனால், சில காலம் அது பிரசுhpக்கப்படாது இருந்துவந்தது. இறுதியில், அவர் அந்த வெளியீட்டினைத் தானே பக்கம் செய்து, அச்சடிக்கும் வேலையினையும், புத்தகம் கட்டும் வேலையினையும் மாத்திரம் அச்சகத்திடம் கொடுப்பதன்மூலம் செலவைக் குறைக்கும் நோக்கில் அவர் அதற்கு ஏற்றவாறு நூலைத் தயாhpத்து, பக்கங்கள் செய்து, அதனை அச்சிட ஆயத்தமாக்கிய நிலையே, பேராசிhpயர் பத்மநாதனின் நூலை வெளியிட்டவர்களுக்கு, அதனை அவசர அவசரமாக வெளியிடவேண்டிய நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்ழகத்தின் பேராசிhpயருக்கு, கொழும்பில் தேச வழமைகள் பற்றியவொரு நூல் வெளியிடப்பட இருப்பது தொpயாத நிலைதான் அன்று காணப்பட்டது.
இது மாத்திரமல்ல. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேராசிhpயர் தேச வழமைச் சட்ட நூலை வெளியிட ஆயத்தமாக இருந்த நிலையில், பேராசிhpயர் பத்மநாதனின் நூலை விசேடமான முறையில்; வாசகர்களை ஏற்க வைக்கவேண்டிய நிர்ப்பந்தமும் வெளியீட்டாருக்கு ஏற்பட்டிருந்தது.
இவைகள் அனைத்தினதும் தாக்கங்களின் விளைவே, மூலங்கள் தொடர்பாக உண்மைப்புறம்பான விபரங்களைக் கொடுக்கவேண்டியிருந்தமையும்; நூலில் பல்வேறு விடயங்களைச் சேர்த்து, அதன் பருமனைக் கூட்டவேண்டிய நிர்ப்பந்தமுமாகும்.
இதனால், தேச வழமைச் சட்டத்தின் உருவாக்க மூலங்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாத, ஏற்கனவே பிரசுhpக்கப்பட்ட யாழ்ப்பாண இராச்சியம், ஏனையவைகள் எனப் பல விடயங்கள்;, நூலில் சேர்க்கப்படவேண்டியிருந்தது!
இசுலாமியருக்கான சட்டம்:
இசுலாமியருக்கான சட்டத்தின் 1806ஆம் ஆண்டுப் பிரதியானது (ஆங்கிலம்), முத்துக்கிஸ்னாவின் நூலில் பக்கம் -ஒஒஒஎiii முதல் தரப்பட்டுள்ளது. இதன் தமிழ் பிரதியானது பேராசிhpயர் பத்மநாதன் அவர்களால் அவரது நூலில் தரப்ட்டுள்ளது.
முடிவு:
தேச வழமைச் சட்டம், முக்குவர் சட்டம், இசுலாமியர் சட்டம், ஏனைய சமூகங்களின் வழமைகளைத் தமிழ் மொழியில் தொகுத்து வெளியிடு;பமை, ஆங்கிலம் தொpயாத தமிழ் மாணவர்கள் வடக்குக் கிழக்குச்; சமூகங்கள் பற்றி, சட்டங்கள், வழமைகளுடாக ஆராய்ந்து அறியப் பெருமுதவியாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இருக்கமுடியாது.
ஆனால், இந்த நூலில் வெவ்வேறு சட்டங்களுக்கு முன்பாக இந்தச் சமூகங்களின் வரலாறுகள் எனக் கூறப்பட்டிருப்பவைகள், சுய ஆய்வில் ஈடுபட இருப்பவர்களுக்குக் குறிப்பிட்ட முற்கருத்துக்களை உண்டுபண்ணிவிடமுடியும். அதேவேளையில், இப்படி வரலாறுகள் எனக் கூறப்பட்டிருப்பவைகளில் தவறுகள் காணப்படுமேயாயின், இந்தச் சட்டங்களுடாக வெவ்வேறு சமூகங்கள் தொடர்பாக ஏற்படத்தப்படும் விளக்கங்கள் பிழையானதாகவும், கற்பானையாகவும்தான் இருக்கும்.
இலங்கையின் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் சமூகங்களின் வரலாறுகள் விஞ்ஞான hPதியாக ஆராயந்தறியப்படாத நிலைதான் தொடர்கிறது. இதை எவரும் எளிதில் நிராகாpத்துவிட முடியாது. இதனால், பல்வேறு சமூகங்கள் பற்றிய கற்பனைக் கதைகளே வரலாறுகளாகக் கொள்ளப்பட்டு, வெவ்வேறு சமூகங்கள் பல்வேறுபட்ட கோட்பாடுகளையும் உருவாக்கி வந்துள்ளன.
இதனால், வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் சமூகத்தினது அரசியல் கூட, ஒருவித கற்பனாவாதத் தன்மையுடையதாகவே இருந்துவருகிறது.
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் தனது நூலில் செய்துள்ள ஆய்வுகளும், வந்துள்ள முடிவுகளும், ஏற்படுத்த முற்;பட்ட விளக்கங்களும், உண்மையில் விஞ்ஞானத் தன்மையற்றவையாகவே உள்ளன.
பதவியா சமஸ்கிருதக் கல்வெட்டு:
பக்;கம் - 43இல், அவர் பதவியாவிலுள்ள சமஸ்கிருத மொழிச் சாசனத்தை ஆராய்ந்து, “சேது குலம்” பற்றிப் பேசியுள்ளார். அந்தக் கல்வெட்டானது:
“மங்கலம் பொலிக! புத்த தருமத்தின் ஒப்பிலாத பண்புகளின் சிகரமான மும்மணிகளைச் சேது குலம் பற்றியது. மணிகளால் அலங்காpக்கப்பெற்ற கரண்டத்தையுடையதான, அழகுடன் பிரகாசிக்கும் இந்த விகாரம் ஸ்ரீபதியில் உலோகநாதன் என்று சொல்லப்படும் தண்டநாயகனால் அமைக்கப்பட்டது. (அது) வேளைக்காற விகாரம் எனப் பெயாpடப்பட்டுப் பாதுகாப்பிற்காக (அவர்களிடம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது” எனக் கூறுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அடைப்புக் குறிகளுள் இடப்பட்டிருப்பவைகள், பேராசிhpயரால் புகுத்தப்பட்டவைகளாகும்.
இக்கல்வெட்டில் முக்கிய விடயங்கள் பல உள்ளன.
இங்கு பேசப்படுவது, பௌத்த விகாரம் ஒன்றுபற்றியே!
மேலும், சேது குலமானது மும்மணிகளுடன், ஆகவே பௌத்தத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
இந்த விகாரமானது, ஸ்ரீபதியில் உலோகநாதன் என்று சொல்லப்படும் தண்டநாயக்கனால் அமைக்கப்பட்டது.
அந்த விகாரத்தின் பெயர்: வேளைக்காற விகாரமாகும்.
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் சேது குலம் பற்றிப் பேசி, அதனை யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆhpயச் சக்கரவர்த்திகளுடன் இணைத்துள்ளபோதும், அந்தச் சேதுகுலமானது பௌத்தத்தைப் பின்பற்றும் ஒரு குலம் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார். ஏன்?
இது, பேராசிhpயர் குறிப்பிடும் ஆhpயச் சக்கரவர்த்திகளைப் பௌத்தத்துடன் இணைக்கிறது; யாழ்ப்பாண இராச்சியத்தைப் பௌத்தத்துடன் இணைக்கிறது!
அடுத்து, அவர் இந்த விகாரத்தை ஸ்ரீபதியில் உலோகநாதன் என்று சொல்லப்படும் தண்டநாயகன் கட்டினான் என்று கூறியுள்ளார். ஆனால், அவர் அந்தத் தண்டநாயகன் வேளைக்காறப் படையொன்றின் நாயகன் என்றுள்ளார். இங்கு அவர் படை எனக் கருதியிருப்பது, போர்ப் படையை ஆகும்.
அவரது கருத்துப்படி, வேளைக்காறப் படை என்பது, ஒரு போர்ப் படையாகும். இதற்கு அவாpடம் உள்ள ஆதாரம் என்ன என்பது தொpயவில்லை.
இங்கு எழும் பிரச்சனை என்னவென்றால், இந்தத் தண்டநாயகன் ஆனவன், ஸ்ரீபதியில் உலோகநாதன் என்று கூறப்படுபவனாக இருப்பது.
பேராசிhpயர், ஸ்ரீபதி என்ற இடம் எது என்பதையும் அடையாளங்காணவில்லை, உலோகநாயகன் என்பவனையும் சாpயாக அடையாளங்காணவில்லை.
ஸ்ரீபதி என்பது, பெரும்பதி ஆகும். காவிhpயின் தென்பாலுள்ள திருவெண்ணெய் ஆகும். உலேகநாதன் என்பது, மொழியியல் hPதியில் வையாநாதன் என்பதுடன் ஒன்றும்; பெருந்தேவன் என்பதுடன் ஒன்றும்; புத்தபெருமானையும் குறிக்கமுடியும்.
இந்தநிலையில், வேளைக்காரவிகாரத்தைக் கட்டியவன், திருவெண்ணெய்யில் பெருந்தேவன் எனறு கூறப்படும் தண்டநாயகன் ஆகும்.
தண்டநாயகன் என்பது, போர்ப்படைத் தலைவனை இங்கு குறிக்கவில்லை. இங்கு, அது, துறவிகள் தலைவனைக் குறிக்கிறது!
இந்தநிலையல், திருவெண்ணையில் பெருந்தேவன் என்று சொல்லப்படும் பௌத்த துறவிகளின் தலைவனே, பதவியாவில் வேளைக்கார விகாரத்தைக் கட்டியிருந்தான்!
ஒட்டுமொத்தத்தில், இந்தப் பதவியாக் கல்வெட்டும், அப்பகுதியில் தமிழ்ப் பௌத்தத்தை உறுதிப்படுத்துகிறது!
யாழ்ப்பாணத்து அரசர்கள் சிங்கையாhpயன், சேதுகாவலன், கங்கைநாடன் எனவெல்லாம் குறிப்பிடப்படுவர் எனப் பேராசிhpயர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இவை உண்மையில் யாரைக் குறிக்கிறது என்பது பற்றி, “செது நாணயங்கள்” பற்றி இந்த இணையத் தளத்தில்; ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.
இந்த வேளைக்காற விகாரமானது, உண்மையில், தமிழாpன் மஹாயாண பௌத்த விகாரம் ஆகும்.
இதைப்போலவே, பல்வேறு விடயங்களுக்கும் பிழையான விளக்கங்களே கொடுக்கப்பட்டுள்ளன.
நூல் வெளியீட்டுப் பிரச்சனைகள்:
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் தேச வழமை, முக்குவர் சட்டங்கள், இசுலாமியச் சட்டம் என்ற பிரதான சட்டங்களை, உண்மையில் இலங்கையில் பெற்றே தனது நூலில் நேரடியாகவும், தமிழில் மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.
தேசவழமைச் சட்டத்தினை முத்துக்கிஸ்னாவின் நூலிலிருந்து நேரடியாகப் பெற்றுத் தந்துள்ளார்.
பிறிற்றோவின் முக்குவர் சட்டம் ஆங்கில நூலையும், அவர் இலங்கையில் பெற்றே தமிழாக்கம்செய்து தந்துள்ளார்.
பரதவர், ஏனையவர்களளின் 5 சட்டங்களின் பிரதிகளையே அவர் புகைப்படம் எடுத்துப் பிரசுhpத்துள்ளார். அவற்றை அவர் மூலப்பிரதிகளாகத் தனது நூலில் தந்துள்ளார்.
இப்படியிருந்தும், பேராசிhpயர் எப்படி உண்;மைக்குப் புறம்பான விபரங்களைத் தனது அறிமுகத்தில் துணிவுடன் கொடுத்துள்ளாரோ புhpயவில்லை. அதே நேரத்தில்;, பதிப்புரையை எழுதியவரும், உண்மைக்குப் புறம்பான விபரங்களைக் கொடுத்துள்ளார்.
பேராசிhpயர் பத்மநாதன் அவர்களின் கடந்தகாலப் பேராசிhpயர் வாழ்க்கையில், அவர் பெரும் பொய்களைக் கூறுபவர் என எவரும் பகிரங்கமாகக் குறைபட்டதாகத் தொpயவில்லை.
ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்பட்ட “யாழ்ப்பாண இராச்சியம்” என்ற நூலில்;, இபன் பத்தூத்தவின் இலங்கைப் பயணக்குறிப்புக்களிலிருந்து எடுத்துக் கூறுவதாகக் கூறி, பேராசிhpயர் பத்மநாதன் அவர்களும், ஏனையவர்களும்; கற்பனையில் பலவற்றை கூறியுள்ளார்கள் என்பதை ஆதாரபு+ர்வமாக, 1994ஆம் ஆண்டில் வெளியடப்பட்டிருந்த “யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண இராச்சிய நூலும், இபன் பத்தூத்தாவின் இலங்கைப் பயணக் குறிப்புகளும்” (1994) ஆய்வு நூல்; நிறுவியிருந்தது.
ஆனால், இந்த நூலில் அவரும், பதிப்பாளரும் உண்மைக்குப் புறம்பான விபரங்களைத் தந்திரும்பமையும், அவைகளை அவர்கள் அவர்களால் அதே நூலில் எழுதப்பட்டிருப்பவையு+டாகவே நிரூபித்திருப்பதும் பெருவியப்புக்குhpயதே.
வியாபார நோக்கமும், ஆய்வுகளை வெளியிடுவதில் போட்டிகளும், இப்படியான குளறுபடிகள் உருவாகக் காரணமாகின்றன என ஓரசாரார் கருதுகின்றனர். இச்சாரார்,
பேராசிhpயர் பத்மநாதன் அவர்கள் இந்த நூலைத் தானாகவோ, அல்லது பல்கலைக்கழக வெளியீடாகவோ விட்டிருந்தால், இப்படியான உண்மைக்குப் புறம்பான விபரக் கொடுப்பனவுகள் இருந்திருக்கமுடியாது எனச் சிலர் கருத்துத் தொpவித்துள்ளனர்.
ஆனால், மற்றொரு சாரார், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகளிலேயே இப்படியான குளறுபடிகள் இருந்தே வருகின்றன. ஆகையால், இது நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதுவோர்களின் நிலைப்பாட்டில்தான் பொpதும் தங்கியுள்ளது என இச்சாரார்கள் வாதிக்கின்றனர்.
எதுவித்திலும், இன்று மூலங்கள், கண்டறிவுகள், ஆய்வு முடிவுகள் தொடர்பாகப் பேராசிhpயர்கள் கூறுபவைகளையும், உhpமை கொண்டாடுவதையும்;, நம்பமுடியாத நிலையை இந்த “இலங்கைத் தமிழர் தேச வழமைகளும், சமூக வழமைகளும்” என்ற நூலின் வெளியீடு உருவாக்கியுள்ளது என்பதை எடுத்த எடுப்பில் நிராகாpக்கமுடியாது.
மேலும், இன்று பல்கலைக் கழகங்களின் முது நிலைப்; பேராசிhpயர்களும், இணைப்பேராசிhpயர்களும், மாணவர்களாலும், விhpவுரையாளர்களாலும் செய்யப்படும் ஆய்வு முடிவுகளைத் தமது ஆய்வு முடிவுகளாகக் வெளிப்படுத்தும் நிலை அதிகாpத்து வருவதையிட்டு கவலை தொpவித்துவருகின்றனர்.
இது, உண்மையில், அறிவியல் தொடர்பாக ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையையும்தான் உருவாக்கியுள்ளது.
“இலங்கைத் தமிழர் தேச வழமைகளும், சமூக வழமைகளும்” என்ற நூலின் வெளியீடுடாக இந்த நிலைமை உருவாகியதற்கு, அதன் வெளியீட்டாளர்கள்தான் காரணமா, அல்லது பேராசிhpயர்தான் காரணமா என்ற கேள்வி இங்கு தொடர்கிறது.
இவைகளைவிட, தேச வழமைச் சட்டம் என்பதன் முதற்பகுதியாக யாழ்ப்பாண இராச்சியம், ஏனையவைகள் பற்றிப் பேராசிhpயர் ஆராய்ந்துள்ளார்.
அவை எவ்வளவுக்கு விஞ்ஞான hPதியானவை என்பதை இங்கு ஆராய்வது பயனற்றது.
எமது இணையத் தளத்தினில் வெளியிட்டுவரும் ஆய்வுக் கட்டுரைகளை முழுமையாகப் படித்து முடிக்கும் ஒருவர், யாழ்ப்பாண இராச்சியம் பற்றிப் பேராசிhpயர் ஆராய்ந்துள்ளவை பற்றித் தானாகவே முடிவுக்கு வரக்கூடிய நிலையில் இருப்பார் என நம்பப்படுகிறது.
மீண்டும் சந்திக்கும்வரை, வணங்கள் பல.
யாழிலிருந்து சிறையன்.

2 comments:
உங்களுடைய திறனாய்வை கண்டேன். இவ்வளவு காரண காரியமாக எழுதிய தாங்கள், இதுகுறித்து ஏதாவது கட்டுரைகளோ அல்லது நூல்களோ வெளியிட்டு இருக்கிறீர்களா?
Post a Comment